கொல்கத்தா: கொல்கத்தாவில் 33 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கொல்கத்தா நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா காரியா கம்தாரி பகுதியில் சில மணி நேரத்தில் 33 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. கொல்கத்தா ஜோத்பூர் பூங்காவில் 29 செ.மீ., கலிகட் 28 செ.மீ., டாப்சியா பகுதியில் 27 செ.மீ. மழை பெய்துள்ளது. கொல்கத்தா நகரில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தா பேனியபுகுர், கலிகாபூர், நேதாஜி நகர், காரியாஹட், ஏக்பலாப்பூரில் மழைக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
+
Advertisement