புதுடெல்லி: கொல்கத்தாவில் ரூ.26 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 10 பேரை கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் மற்றும் ஜாதவ்பூரின் பிஜோய்கர் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்பு வளாகங்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து கணிசமான அளவு ஹைட்ரோபோனிக் வீட், கஞ்சா மற்றும் கோகெயின் போதைப்பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. மற்றொரு குடியிருப்பு பகுதியில் பேக் செய்யப்பட்ட விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் டம்டம்மில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்துக்கு பாங்காக்கிலிருந்து வந்திறங்கிய மூன்று பெண்கள் உள்பட நான்கு பேர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒட்டுமொத்தமாக ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பாருள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 பேர் கைது செய்யப்பட்டனர்.