சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் சென்னை, தீவுத்திடலில், கட்டப்பட்டு வரும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையம், கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 அடுக்குமாடி குடியிருப்புகள், துறைமுகம் தொகுதி, வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், 700, 144 அடுக்குமாடி குடியிருப்புகள், சமுதாய நலக்கூடம் மற்றும் விளையாட்டு திடல் என ``ஒருங்கிணைந்த வளாகம்”.
திரு.வி.க. நகர் தொகுதி, பெரம்பூர், சந்திரயோகி சமாதி சாலையில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் கட்டப்பட்டு வரும் சலவைக்கூடம் ஆகிய இடங்களில் நடந்து வரும் கட்டுமானப் பணிகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தாரர்களை அறிவுறுத்தினார். பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தை அடுத்த மாதம் செப்டம்பர் இறுதிக்குள் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வண்ண மீன் உற்பத்தியாளர்களுடைய பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைக்கிறார்’ என்றார்.
