Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கொடுங்கையூரில் எரி உலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, சின்னத்துரை மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம், வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதில், கொடுங்கையூரில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆபத்தான எரி உலை திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ள இழப்பீடு தொகையை வழங்கிட வேண்டும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தூய்மை பொறியியல் துறையை தொடங்க வேண்டும்.

பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலன்களை பெற்றவர்களின் உரிமையை பறிக்கக் கூடிய விதத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பாதிப்புகளை சந்திப்பவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். கேபிள் டிவி தொழிலில் பழைய ஆப்ரேட்டர் பகுதியில் புதிய எல்சிஓ போடுவதை உடனே நிறுத்த வேண்டும், தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் டிசிஓஏ சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.