ஈரோடு:சுதந்திர போராட்ட வீரரான கொடிகாத்த குமரனுக்கு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை அட்டவணைப்பிடாரியூர் மேலப்பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பில் உருவச்சிலையுடன் மணி மண்டபம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்பேரில், சென்னிமலை மேலப்பாளையத்தில் தியாகி குமரனுக்கு உருவச்சிலையுடன் மணி மண்டபம் அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.