கோடநாடு எஸ்டேட் பங்களாவை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை : சிபிசிஐடி தகவல்
சென்னை : கோடநாடு எஸ்டேட் பங்களாவை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சிபிசிஐடி தகவல் அளித்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் சிபிசிஐடி இவ்வாறு தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டோரில் வாளையார் மனோஜ் மட்டும் இன்று ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணை ஆக. 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.