சென்னை: கோடம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றது. பனகல் பார்க் - கோடம்பாக்கம் வரை சுரங்கம் தோண்டுவது கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. பூவிருந்தவல்லி கலங்கரை விளக்கம் வரை 26.8 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. 10.3 கி.மீ. தூரத்துக்கு கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைய உள்ளது. பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரை 2,047 மீட்டர் நீளத்துக்கு தற்போது சுரங்கப்பாதை பணி நிறைவு பெற்றது.
+
Advertisement