கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன்மர காடுகள், மோயர் பாயின்ட் ஆகிய 4 இடங்களுக்கும் பொதுமக்கள் செல்ல வனத்துறையால் அந்தந்த பகுதிகளில் தலா ரூ.10 வீதம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. மேற்கூறிய 4 இடங்களுக்கும் செல்ல தனித்தனியாக நுழைவு கட்டணம் வசூலிப்பதை கைவிட்டு, ஒரே நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகளை வனத்துறை எடுத்துள்ளது.
இதன்படி நேற்று முதல் தூண் பாறை அருகே நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா வாகனங்களுக்கு ரூ.50, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 வீதம் வசூலிக்கப்பட உள்ளது. 4 சுற்றுலா இடங்களுக்கும் செல்ல ஒருவருக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20, பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.