திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும், விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் டிவி டவர் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இரண்டு காட்டெருமைகள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோசமாக மோதி கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொட்டும் மழையில் இரண்டு காட்டெருமைகள் மோதி கொண்டதை அங்கிருந்த ஒருவர் தனது போனில் படம் பிடித்துள்ளார், சிறிது நேரம் சண்டையிட்ட அந்த காட்டெருமைகள் அங்கிருந்து மரம் மற்றும் செடிகளை சேதப்படுத்தியுள்ளதும் குறிப்பிடதக்கது.