திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செட்டியார் பார்க் பகுதி முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது நிலையில் செட்டியார் பார்க்குக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரங்களில் செட்டியார் பார்க் பகுதியில் தெரு நாய்கள் சுற்றுலாப் பயணிகளை மற்றும் அப்பகுதி மக்களை தாக்கி வந்தது தற்போது பகுதியில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தெரு நாய் ஒன்று உடல் முழுவதும் நோய் தொற்று ஏற்பட்டு முகத்தில் பிளாஸ்டிக் பாட்டிலுடன் அப்பகுதியில் உலா வருகிறது பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் நோய் தொற்று உடன் சுற்றித் திரியும் நாயை சிகிச்சை அளிக்க வேண்டும் தலையில் மாட்டிக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டிலை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் அதிகமாக சுற்றி தெரியும் தெரு நாய் களை பிடித்து சிகிச்சை அளித்து தடுப்பூசி போட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது


