திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே அடுக்கம் சாமக்காட்டு பள்ளம் என்ற இடத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து தீபிகா என்ற இளம் பெண் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது பெருமாள் மலை கிராமம் சாமக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை செல்லதுரைக்கு ராஜசேகரன் என்ற மகனும் ஒரு மகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் செல்லதுரையில் மகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. செல்லதுரையின் மகள் திருமணத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்ததாக கூறப்படக்கூடிய நிலையில் தீபிகா என்ற பெண் ஊட்டியை பூர்வீகமாக கொண்ட இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
இந்நிலையில் நேற்று செல்லதுரையின் மகள் திருமணத்திற்காக வந்த தீபிகாவை செல்லதுரையின் மகன் ராஜசேகரன் அழைத்துச் செல்லும் போது செல்லதுரையின் தோட்ட பகுதியை பார்வையிட ராஜசேகரன் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக ராஜசேகரன் மற்றும் தீபிகா (22)பயணித்த ஜீப் வாகனம் செல்லதுரையின் தோட்டம் அருகே உள்ள சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தீபிகா உயிரிழந்து விட்டார் இரவு முழுக்க படுகாயங்களுடன் துடிதுடித்த ராஜசேகரன் தற்போது முதற்கட்ட சிகிச்சை முடித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இரவு முழுக்க கவிழ்ந்த வாகனத்தில் பரிதவித்த இரு உயிர்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபிகாவின் உடலை போலீசார் மீட்ட நிலையில் தற்போது தீயணைப்பு துறையினர் மற்றும் கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.