Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடைக்கானலில் அனுமதியற்ற விடுதிகள், ஹோம் ஸ்டே குறித்து புகார் அளித்திடுக: மாவட்டம் நிர்வாகம்

திண்டுக்கல்: கொடைக்கானல் மலையில் தங்கும் விடுதிகள், பண்ணை தங்கும் விடுதிகள், ஹோம் ஸ்டே உள்ளிட்டவை அனுமதியின்றி இயங்கினால் புகார் அளிக்குமாறு கட்டணமில்லா தொலைபேசி என்னை மாவட்டம் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. கொடைக்கானல் என்றாலே பசுமை போர்த்திய மலையும் முகடுகளும், அழகிய சோலைகளும், அருவிகளும், கண்கவர் விலை நிலங்களும் தான் நாம் நினைவுகள் அலங்கரிக்கும். ஈடு இணையில்லாத இயற்கையின் எழில் கொஞ்சம் வண்ணமிக்க காட்சிகள் கண்முன்னே வந்து செல்லும்.

சூழல் முக்கியத்துவம் கொண்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது கட்டுமானங்களால் நிறைந்து வருகிறது. கொடைக்கானல் நகரில் ஏற்கனவே அனுமதியின்றி விடுதிகள் ஏராளமாக உள்ளன. இதன் தொடர்ச்சியாக கொடைக்கானல் மேல் மலை, கீழ் மலை ஒன்றிய கிராமங்களில் வணிக நோக்கில் கட்டுமானங்கள் எழுந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை தங்க வைக்கும் நோக்கோடு விளைநிலங்கள், மர வீடுகள், முக்கோண வீடுகள், கண்ணாடி குமிழ் வீடுகள், போந்து வீடுகள் என போன்றவையும் பிரமாண்டமான பண்ணை வீடுகளும் ஏராளமாக கட்டுப்பட்டு வருகின்றன.

இவற்றுள் ஒரு சில தவிர மற்ற அனைத்தும் உரிமம் பெறாமல் கட்டுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடுகளிலேயே சுற்றுலா பயணிகளை தங்க வைக்கும் ஹோம் ஸ்டே முறைக்கும், பண்ணை விடுதிகளுக்கு மத்திய, மாநில அரசுகளில் அனுமதியின் பெயரில் ஏற்கனவே உரிமை அளிக்கப்படுகின்றன. ஆனால் கொடைக்கானல் மலையில் உரிமம் பெறாமல் நூற்றுக்கணக்கானவை முளைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து அனுமதியற்ற காட்டேஜ் உள்ளிட்டவை மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தான் நடவடிக்கையை தொடங்கியுள்ளது திண்டுக்கல் மாவட்டம் நிர்வாகம். உரிய அனுமதியின்றி இயங்கும் பண்ணை தாங்கும் வீடுகள், ஹோம் ஸ்டே உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்குமாறு கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் எண்களை அறிவித்துள்ளது.