கொடைக்கானலில் அடர் பனிமூட்டத்துடன் கடுங்குளிரும் நிலவுகிறது: அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்
கொடைக்கானல்: தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று காலை கடும் மூடுபணி நிலவியது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலைகளில் பனிமூட்டம் மூடியது. தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை கொட்டி தீர்த்து வருகிறது.
குறிப்பாக எப்போதுமே இந்த வடகிழக்கு பருவமழையில் அதிகமாக மழை பொழிவு, மலை பகுதியில் இருக்கும். அதன் எதிரொலியாக இன்று கொடைக்கானலில் இன்று வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், நேற்று இரவு முதலே தொடர்ந்து சாரல் மழையானது பெய்து வந்தது. இன்று காலையில் இருந்து கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் கொடைக்கானலுக்கு வரக்கூடிய பிரதான சாலைகள் அனைத்திலுமே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு இந்த கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.
பனிமூட்டத்துடன் சேர்ந்து கடும் குளிரும் நிலவி வருவதால் இங்கு காலையில் அங்கு நடைப்பயிற்சி செல்லக்கூடியவர்கள் மற்றும் அதிகாலையில் பணிகளில் தங்களுடைய வேலைக்கு செல்பவர்கள் அனைவருமே தங்களுடைய இயல்பு வாழ்கை முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்ந்து காலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவி வந்த நிலையில், மிதமான மழை துவங்கி இருக்கிறது. மேலும் தொடர்ந்து இந்த மழையானது இன்னும் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து சாரல் மழை மற்றும் கடும் பனிமூட்டம் நிலவி வருவதல் பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.