திண்டுக்கல்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவில் அருகே 50 அடி கிணற்றில் தவறிவிழுந்த காட்டெருமையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல் மலை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டெருமைகள் கூட்டம் உலவி வருகிறது. காட்டெருமைகள் உலவி வருவதால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், விவசாயிகள் மீது தாக்குதலில் ஈடுபடுவது உள்ளிட்ட விலங்குகள் மோதல் அதிகரித்து காணப்படுகிறது.
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில் எப்போதுமே பரபரப்பான இடமாக இருக்கும். இந்த இடத்தில் இன்று காட்டெருமை கூட்டம் உலா வந்துள்ளது . அப்போது 50 அடி கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து இருக்கிறது.காட்டெருமை மீட்பதற்காக தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ள நிலையில், காட்டெருமை மீட்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர.
இந்த வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக காட்டெருமை கிணற்றில் விழக்கூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.காட்டெருமைகள் உலவி வருவது தொடர்பாக பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது. மேலும், கொடைக்கானல் மலை பகுதி முழுவதும் கடுமையான பனிமூட்டம் மற்றும் மழையானது பெய்து வருவதால் இந்த மீட்பு பணியில் தற்போது சிக்கலும் நீடித்து வருகிறது.