சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் பிரபல ஹோட்டலில் அறைகள் எடுத்து கஞ்சா புகைத்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை கீழ்பாக்கம் EVR சாலையில் அமைத்துள்ள பிரபல ஹோட்டலில் பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா, மெத்தப்பட்டமைன் போதை பொருட்களை பயன்படுத்தி 18 பேர் அறைகள் எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து, உடனடியாக போலீசார் 18 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் களிடமிருந்து 3 கார்கள், 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 அரை கிராம் கஞ்சா, 18 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்தகட்ட விசாரணையில் கடந்த 5ம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மெத்தப்பட்டமைன், கஞ்சா, மது உள்ளிட்டவை பார்ட்டியில் ஈடுபட்டு. அதன் பின்னர் பக்கத்தில் இருந்த 3 அறைகளில் தங்கி இருந்ததால் இவர்கள் பிடிபட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், இது தொடர்பாக பல்வேறுகட்ட விசாரணையில் ஈடுபட்ட போது இதில் இசையமைப்பாளரின் மகளும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 18 நபர்களையும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியபோது அவர்களுக்கு நீதிமன்ற ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதே போல் கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் இது தொடர்பான வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.