Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கிளாம்பாக்கத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சிவசங்கர்!!

சென்னை : 2025-ஆயுதபூஜை தொடர் விடுமுறையினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள். நேற்றைய தினம். இரவு (29.09.2025) கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வின்போது, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் திருமதி.இரா.கஜலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.இரா.மோகன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.க.குணசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள், பேருந்தினை இயக்கும் ஓட்டுநர். நடத்துநர்களிடம் பேருந்தினை மிகவும் கவனமுடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என கணிவுடன் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணியிடம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.

2025-ஆயுதபூஜை விடுமுறையினை தொடர் முன்னிட்டு, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 26.09.2025 அன்று 450 சிறப்புப் பேருந்துகளும், 27.09.2025 அன்று 696 சிறப்பு பேருந்துகளும், 29.09.2025 அன்று 194 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டது. இதன் மூலமாக 7,616 பேருந்துகளில் 3,80,800 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பணம் செய்துள்ளனர். மேலும், இன்று (30.09.2025), தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 1,310 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதிவு விவரம்:

ஆயுதபூஜை தொடர் விடுமுறையினை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஒட்டுமொத்தமாக 50,913 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள 26.013 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.