புதுடெல்லி: நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறு நீரகத்தை தானம் பெற்ற புகார் தொடர்பான விவகாரத்தை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,‘‘கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி.பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழு விசாரித்துஅறிக்கையை செப்.24ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement