டெல்லி: சிறுநீரக விற்பனை முறைகேடு வழக்கில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆட்சேபனை இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக விற்பனை மோசடி குறித்து விசாரிக்க ஐகோர்ட் கிளை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. நாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளில் இருந்து சிறப்புக் குழுவை கோர்ட் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு காவல்துறைக்கு எதிராக சென்னை ஐகோர்ட் கூறிய கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழு அமைத்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறுநீரக மோசடி வழக்கில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
+
Advertisement