சென்னை : குடும்ப நண்பர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தஞ்சையைச் சேர்ந்த பெரியசாமிக்கு, ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் கிட்னியை தானமாக தர முன்வந்தார்.ஆனால், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அங்கீகார குழு உத்தரவிட்டது. உத்தரவை எதிர்த்து, கிட்னியை தானமாக பெற உள்ள பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
+
Advertisement