மும்பை: மும்பை போவாய் என்ற இடத்தில் பட்டப் பகலில் 20 குழந்தைகள் கடத்தி சிறைபிடித்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கடத்தல் நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று 20 குழந்தைகளையும் காவல்துறை பத்திரமாக மீட்டது. குழந்தைகளை கடத்திய ரோஹித் ஆர்யா போலீசாரை தாக்கியதை அடுத்து என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த ரோஹித் ஆர்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறைபிடிக்கப்பட்ட குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையின் போது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
+
Advertisement
