Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குடியாத்தம் அருகே மிளகைப் பொடி தூவி காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி பேட்டையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வேணு என்பவர் தனது நான்கு வயது மகனை பிற்பகல் உணவு இடைவெளிக்காக பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்திருகிறார். அப்பொழுது அவரது வீட்டு வாசலில் நின்று இருந்த சொகுசு காரில் திடீரென இறங்கிய ஹெல்மெட் அணிந்த நபர் சிறுவனை கடத்திக்கொண்டு காரில் தப்பி சென்றனர்.

அந்த சிறுவனின் தந்தை மீது மிளகாய் பொடியை தூவி இருக்கிறார்கள். இதனால் தனது மகனை காப்பாற்றுவதற்காக அந்த காரில் தொங்கியபடி காரில் தெருமுனை வரை சென்று இருக்கிறார். அந்த கும்பல் அவரை தள்ளிவிட்டு தப்பிசென்றுவிட்டது. இந்த நிலையில் உடனடியாக அங்கேயுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக அனைத்து காவல் நிலையங்களும் உஷார் செய்யப்பட்டு அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வேலூர் டிஐஜி தர்மரராஜன் உத்தரவின் பெயரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உடனடியாக வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர். தலைமையில் தனிப்படைகள் அமைத்து கடத்தபட்ட சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட காரின் பதிவு எண் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தது என்றும் அது போலி பதிவு எண் என்று விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் கார் சென்ற வழித்தடத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.மேலும் நான்கு தனிப்படைகளிலும் கார் சென்ற வழித்தடத்தில் விசாரித்து வந்த நிலையில் கடத்தி சென்ற கும்பல் 2 மணி நேர இடைவெளியில் குடியாத்ததில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் மாதலூர் என்ற இடத்தில் அந்த சிறுவனை சாலை ஓரம் இறக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளது.

தற்பொழுது குடியாத்தம் தனி படை போலீசார் அந்த சிறுவனை மீட்டு குடியாத்தம் அழைத்து கொண்டு வந்திருக்கிறார்கள். சிறுவனை பட்டப்பகலில் தந்தையின் மீது மிளகாய் பொடியை தூவி கடத்தபட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.