திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் திடீரென்று தொழிற்சாலைக்குள் புகுந்து தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொழிற்சாலைக்கு தீ வைப்பு, தாக்குதல், தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
+
Advertisement
