Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கேரள மக்களை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கடும் சாடல்

திருவனந்தபுரம்: கேரள மக்களை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டதாக அம்மாநில உயர்நீதிமன்றம் சாட்டியுள்ளது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய விதிகள் அனுமதிக்கவில்லை என்று ஒன்றிய அரசு வாதிட்டது. "ஒன்றிய அரசின் கருணை கேரள மக்களுக்கு தேவையில்லை; கேரள மக்களுக்கு உதவ ஒன்றிய அரசுக்கு மனம் உள்ளதா? மனமில்லை என்றால் தைரியமாக சொல்லிவிடுங்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?" என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.