திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கண்ணபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருக்கு அங்குள்ள கீழரா என்ற பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டை கண்ணூர் அலவில் என்ற பகுதியைச் சேர்ந்த அனூப் மாலிக் என்பவருக்கு இவர் வாடகைக்கு விட்டுள்ளார். அனூப் மாலிக் கோயில் திருவிழாக்களுக்கு வெடிபொருட்களை சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்த வீட்டிலிருந்து வெடிபொருட்கள் வெடித்து சிதறி ஒருவர் பலியானார். ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
+
Advertisement