கேரளாவில் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி அடைந்தவர்களுக்கு இழப்பீடு தரப்படுமா..? உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: கேரளாவில் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி அடைந்தவர்களுக்கு இழப்பீடு தரப்படுமா..? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. எர்ணாகுளம் - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை தரம் குறைவாக இருந்ததால் அதில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 12 மணி நேரம் கடந்து செல்லும் சாலைக்கு சுங்கக் கட்டணம் ரூ.150 ஏன் தர வேண்டும் என தலைமை நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.