சென்னை: கேரளாவுக்கு தமிழக தனியார் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் செல்லாது என்று தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு கேரள போக்குவரத்து துறை ரூ.70 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அபராதம் விதித்ததை கண்டித்து தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்
+
Advertisement

