கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு - உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
டெல்லி : கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. ஏமன் நாட்டில் கேரள செவிலியரின் தண்டனை என்ன ஆனது என்ற உச்சநீதிமன்ற கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது; பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.