திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து இளம் பெண்ணை கீழே தள்ளிவிட்ட தொழிலாளியை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் ஆலுவாவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இரண்டு இளம் பெண்கள் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். மது போதையுடன் எரிய நபர் ஒருவர் கழிவறை வாசலில் நின்று இருந்த அந்த இளம் பெண்களில் ஒருவரை காலால் எட்டி உதைத்து ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.
தண்டவாளத்தில் விழுந்த அந்த பெண் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அந்த வழியாக வந்த மெழு ரயிலின் லோகோ பைலட், பார்த்து ரயிலை நிறுத்தி அந்த பெண்ணை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். இதனிடையே போதை ஆசாமியை, கொச்சுவேளி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். அந்த நபர் பணச்சமுடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பதும் கோட்டயத்தில் பெயிண்ட் தொழிலாளியாக பணியாற்றிவருவதும் தெரியவந்துள்ளது.
