திருவனந்தபுரம்: வயநாட்டில் அலுவலகத்தில் வைத்து பெண் வன அதிகாரியை சக அதிகாரி பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் படிஞ்ஞாரத்தரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுகந்தகிரி வன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் செக்ஷன் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ரதீஷ்குமார். நேற்று முன்தினம் இவர் பகல் பணியை முடித்துவிட்டு திரும்பினார். இரவுப் பணியில் வேறொரு பெண் அதிகாரி இருந்தார்.
திடீரென மீண்டும் திரும்பி வந்த ரதீஷ்குமார், அந்தப் பெண் அதிகாரியை அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதிகாரி, ரதீஷ்குமாரை கீழே தள்ளிவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியே ஓடினார். இதுகுறித்து வன அதிகாரி ரதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கல்பெட்டா வனச்சரக அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.