பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகளை சுட்டு கொல்ல அனுமதி: அவசர சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்
திருவனந்தபுரம்: கேரளாவில் வயநாடு, இடுக்கி, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தாக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இதில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வனவிலங்குகளை கொல்வதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 1972ம் ஆண்டின் மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்த அவசர சட்டத்தை அமல்படுத்த முடியும். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கலெக்டர் அல்லது தலைமை வன அதிகாரியின் உத்தரவின் பேரில் வனவிலங்குகளை சுட்டுக் கொல்ல முடியும்.