கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வரவேற்பு
டெல்லி: கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை வென்றுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்ட நாங்கள் இயக்கத்தை தொடங்கி உள்ளோம். சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வருவதன் மூலம் சர்வாதிகாரத்துக்கு எதிரான இயக்கம் வலுப்பெறும் என்று அமைச்சர் அதிஷி தெரிவித்திருக்கிறார்.