டெல்லி: கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது.
கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். கி.மு 8ம் நூற்றாண்டின் கீழடி நாகரிகத்தை கி.மு 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. உண்மையை மாற்ற முடியாது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.