டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் சிர்சி ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கேதர்நாத் கோயிலுக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 6 பக்தர்கள் மற்றும் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். இந்நிலையில், கேதார்நாத் கோயிலை நெருங்கிய ஹெலிகாப்டரில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இருந்த ஊழியர்களும், பக்தர்களும் அலறியடித்து ஓடினர்.
ஆனால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு ஹெலிபேட் தளத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு முன்பாகவே பள்ளத்தில் பத்திரமாக ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் அவர்கள், கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.