காவாசாக்கி நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட காவாசாக்கி வெர்சைஸ் எக்ஸ் 300 மோட்டார் சைக்கிளை 296 சிசி பேரரல் டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11,500 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 39.45 எச்பி பவரையும், 10,000 ஆர்பிஎம்-ல் 25.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் பின்புறம் யுஎன்ஐ-டிராக் மோனோ ஷாக் அப்சர்வர்கள் இடம் பெற்றுள்ளன. 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், டிஜிட்டல் அனலாக் டிஸ்பிளே, அகலமான பின்புற இருக்கைகள் உள்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. புதிதாக கேண்டி லைம் கிரீன், மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் ஆகிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.3.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

