காவாசாக்கி நிறுவனம், மேம்படுத்தப்பட்ட நிஞ்சா இசட்எக்ஸ் 6 ஆர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 636 சசி இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 13,000 ஆர்பிஎம்-ல் 129 எச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்-ல் 69 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் , டிஎப்டி ஸ்கிரீன், பவர் மோட்கள், குவிக் ஷிப்டர்கள், 3 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சானல் ஏபிஎஸ், கிப்ஸ் எனப்படும் காவாசாக்கி இன்டலிஜென்ட் ஆண்டி-லாக் சிஸ்டம் உள்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.11.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இந்த புதிய மேம்படுத்தப்பட்ட மாடல் சுமார் ரூ.60,000 அதிகம்.