காவாசாக்கி நிறுவனம் கேஎல்எக்ஸ்230 மோட்டார் சைக்கிளை கடந் ஆண்டு ரூ.3.3 லட்சம் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்திருந்தது. அப்போது முழுமையாக இறக்குமதி செய்து சந்தைப்படுத்தியிருந்தது. தற்போது இந்தியாவிலேயே இந்த மோட்டார் சைக்கிளின் உற்பத்தி துவங்கி விட்டது. இதையடுத்து, இதன் விலை ரூ.1.3 லட்சம் குறைந்து, ரூ.1.99 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 233 சிசி ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,800 ஆர்பிஎம்-ல் 19 எச்பி பவரையும், 6,200 ஆர்பிஎம்-ல் 19 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், புளூடூத் இணைப்புடன் கூடிய எல்சிடி டிஸ்பிளே, டூயல் சானல் ஏபிஎஸ் இடம் பெற்றுள்ளன.