காட்டுமன்னார்கோவிலில் உள்ள திருமுட்டம் வட்டத்தில் 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!
சென்னை: காட்டுமன்னார்கோவிலில் உள்ள திருமுட்டம் வட்டத்தில் 38 வருவாய் கிராமங்களை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விவசாயிகளின் 15 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டது. 38 வருவாய் கிராமங்களும் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 38 வருவாய் கிராமங்களும் டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும் என ஜூலை மாதம் முதல்வர் அறிவித்திருந்தார். முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக திருமுட்டம் வட்டத்தை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.


