புதுடெல்லி: டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் நேபாள மாநிலத்தின் தலைநகரான காத்மண்டிற்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட இருந்தது. இந்நிலையில் அங்கிருந்த மற்றொரு விமானத்தில் இருந்தவர்கள் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டெயில்பைப்பில் (இயந்திரத்தின் எரிவாயு ஓட்டப்பாதையில் ) தீப்பிடித்து இருக்கலாம் என்ற தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து விமானிகள் எந்த எச்சரிக்கையோ, அறிவிப்புக்களையோ தரவில்லை. ஆனால் விமானிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடிவு செய்தனர். இதனையடுத்து விமானம் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனையடுத்து சுமார் 4மணி நேரத்துக்கும் மேலாக விமானம் தாமதமாக புறப்பட்டுள்ளது.
+
Advertisement