தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நடன.காசிநாதன் அவர்களது மறைவு தொல்லியல் துறைக்குப் பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், அறிஞர் பெருமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்