ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ் புரா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் ஊடுருவ முயன்றதாக தெரிகிறது. இதனை கவனித்து உஷாரான எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அவரை எச்சரித்துள்ளனர். எனினும் வீரர்களின் எச்சரிக்கையை மீறி அவர் முன்னேறியுள்ளார்.
இதனையடுத்து விரைந்து செயல்பட்ட வீரர்கள் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதாவை சேர்ந்த ஊடுருவல்காரர் சிராஜ் கான் என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.