ஜம்மு: ஓடும் ரயில் மீது கழுகு மோதி கண்ணாடி உடைந்தததில் பைலட் காயம் அடைந்தார். காஷ்மீரில் பாரமுல்லாவில் இருந்து பனிஹாலுக்கு ரயில் சென்று கொண்டு இருந்தது. விஷால் என்கிற லோகோ பைலட் ரயிலை ஓட்டினார். அனந்தநாக் மாவட்டம் பிஜ்பெஹாரா மற்றும் அனந்த்நாக் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென பறந்து வந்த கழுகு ரயில் இன்ஜின் கண்ணாடி மீது மோதி அதை உடைத்து உள்ளே விழுந்தது. இதில் லோகோ பைலட் விஷால் காயம் அடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு ரயில் தற்காலிகமாக அனந்த்நாக் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. லோகோ பைலட் விஷாலுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிகாரிகள் தேவையான சோதனைகளை மேற்கொண்ட பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டது.
+
Advertisement

