குப்வாரா: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கெரான் செக்டார் பகுதியில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கு மேலும் தேடுதல் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
+
Advertisement

