தென்காசி: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்திற்கு வந்தார். அவர், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கோவிந்தப்பேரி சோகோ மென்பொருள் நிறுவனர் இல்லத்தில் தங்கினார். நேற்று காலை ராம்நாத் கோவிந்த் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்காசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவரை கலெக்டர் கமல்கிஷோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் ராஜகோபுரம் முன்பு இந்துசமய அறநிலைத்துறை சார்பில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து காசிவிஸ்வநாத சுவாமி சன்னதி முன்புள்ள நந்தீஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தார்.