கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்தேன்; மறைக்கவில்லை: அமித் ஷாவை சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
டெல்லி: டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், என்னுடைய டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன. அனைவரிடமும் சொல்லிவிட்டே அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றேன். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு வாகனத்தில்தான் சென்றேன். அமித் ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்தேன். முகத்தை துடைத்ததில் என்ன அரசியல் உள்ளது. முகத்தை துடைத்ததை வீடியோ எடுத்து அதை வெளியிடுவதா? என்று எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.