Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் ரொம்பவே ஷாக்கானது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காக்கிகள் தனிப்பிரிவுல தலைமை இல்லாததால் அந்த பிரிவே ஒருங்கிணைப்பு இல்லாம இருக்குதாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி தனிப்பிரிவுல பணிபுரிஞ்சு வந்த அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டாரு.. அவருக்கு அப்புறமாக ஒரு லேடி அந்த பிரிவுல பொறுப்பு அதிகாரியாக இருந்தாங்க.. அப்புறம், ரெண்டு ஸ்டார் காக்கிகள் மூன்று பேரைக் கொண்டு தனிப்பிரிவு இயங்க தொடங்கிச்சு.. அதாவது இந்த தனிப்பிரிவுதான் ஒட்டுமொத்த மாவட்ட காக்கிகள் நிலையத்தையும் கண்ட்ரோல் செய்ற துறையும், கண்காணிக்குற துறையுமாக இருக்கும்.. இப்படிப்பட்ட தனிப்பிரிவுல, த்ரி ஸ்டார் காக்கிகள் தான் ஒருங்கிணைச்சு செயல்பட்டு வந்தாங்க.. அதுலயும் சில சப்-டிவிஷன் காக்கிகள் இந்த த்ரி ஸ்டார் காக்கிகளுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்குறதில்லைன்னு புகார்களும் இருந்துச்சு..

இவங்களுக்கே இப்படின்னா, இப்ப இருக்குற ரெண்டு ஸ்டார் காக்கிகளுக்கு எப்படி இருக்கும்னு பாருங்க, ரெண்டு ஸ்டார் காக்கிகள் என்னவோ நல்லாத்தான் ஒர்க் பண்றாங்க.. இருந்தாலும் உயர் அதிகாரிகள் கிட்ட இவங்க எப்படி தகவலை கேட்டு பெறமுடியும்ன்ற கேள்வி எழுந்திருக்காம்.. வெயிலூர் மாவட்ட தனிப்பிரிவுல ஒருங்கிணைப்பும் இல்லாம இருக்குதாம்.. இதனால டிஎஸ்பி ரேங்க்ல இருக்குற அதிகாரியையோ அல்லது ஏடிஎஸ்பி ரேங்க் அதிகாரியையோ தனிப்பிரிவு ஆபீசராக நியமிக்கணும்.. அப்பத்தான், மாவட்ட காக்கிகள் ஒருங்கிணைஞ்சு செயல்பட முடியும்னு அந்த காக்கிகள் துறையில இருந்தே குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கரூர்ல 41 பேர் உயிரிழந்த கதை யை கேட்டு விசாரணைக்கு சென்ற சிபிஐ ஆபீசர்ஸ் கண்கள் குளமாகியிடுச்சாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘புதிதாக கட்சி தொடங்கிய நடிகர், கரூரில் பொதுக்கூட்டத்தை நடத்தப்போவதாக சொல்லியதால் அவரை பார்க்கும் ஆவலில் வந்த 41 ஏழை எளிய மக்களின் உயிர் போனது.. அதுவும் குடிப்பதற்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாமல் இருந்ததால் பெண்கள், குழந்தைகள் என அவர்கள் கொடூரமாக துடிதுடித்து உயிரைவிட்டாங்க.. இந்த துயரத்தை கேள்விப்பட்டதும் இரவோடு இரவாக ஓடோடிச்சென்ற முதல்வர், கண்கலங்கிய நிலையில் ஆறுதல் சொன்னதோடு அவர்களுக்கான உதவிகளை வழங்கினாரு.. அந்நேரத்தில் தன்னை நம்பி வந்த மக்கள் பக்கம் இல்லாமல் ஓடி ஒளிந்து கொண்டாராம் அந்த நடிகரும், அவரது கூட்டாளிகளும்.. இதெல்லாம் பழைய வேதனை என்றாலும் மனதிருக்கும் அரசியல்வாதிகளால் இதை எளிதில் மறக்க முடியாது.. ஆனால் வீட்டிற்குள் பதுங்கியிருந்த அந்த நடிகர் மற்றும் கூட்டாளிகளுக்கு இன்னும்கூட இறுமாப்பு போகலையாம்.. நம்மால் இத்தனை உயிர்கள் போயிருக்கு என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாத நிலையில் இன்னும் அதிகமா கொக்கரிக்காங்களாம்.. முப்பது ஆண்டுகள் சினிமாவில் நடித்ததினால் அரசியலில் கூட சினிமா எண்ணத்திலேயே புதிய தலைவர் மூழ்கி கிடக்காராம்.. இந்த கொடிய வேதனைக்கு பிறகு கூட இறந்தவர்களின் புகைப்படத்தை வைத்து ஒரு அஞ்சலி கூட செலுத்தாத நிலையில், சினிமா கெத்திலேயும் அதே ஸ்டைலிலுமே இருக்காராம்.. இச்சூழலில் கரூர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் ரொம்பவே ஷாக்காயி இருக்காங்களாம்.. நடிகரின் கரூர் பயணத்திற்கு புறப்பட்டு சொகுசு பஸ்சில் வரும் காட்சிகள், காருக்குள்ளிருந்து லைட்டை ஆப் செய்து போட்டது என அவரது நடவடிக்கைகளை பார்த்து வெறுத்துப் போனாங்களாம்.. மக்களை காக்க வருவேன் என கூறிக்கிட்டு ரசிகர்களை இவ்வளவு மட்டமாக நடத்திய காட்சிகள் அவர்களை ரொம்பவே ரணகளப்படுத்தியிருக்காம்.. அதோடு இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்ததும் அவர்களுக்கு நெஞ்சே வெடித்துப்போச்சாம்.. கண்கலங்கிய அவர்கள் தொடர் விசாரணையை நடத்திக்கிட்டிருக்காங்க.. இவ்வளவு வித்தியாசமான எண்ணங்களை கொண்டவர் எப்படி மக்களை காப்பாற்றுவார் என்ற கேள்வி அவர்களின் மனதில் எழுந்திருப்பதாக சிபிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகிக்கிட்டிருக்கு.. கரூர் சம்பவத்திற்கு பிறகு நடிகரின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்துக்கிட்டிருக்காங்களாம் அந்த உளவுப்பிரிவு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முடங்கிக் கிடக்கும் முரசு கட்சியால் தொண்டர்கள் எல்லாம் ரொம்பவே சோர்ந்து போய் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கொசு வலைக்கு பெயர் போன மாவட்டத்தில் முரசு கட்சியினர் செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறதாம்.. சொல்லும் அளவுக்கு கட்சியில் பெரிதாக நிர்வாகிகளுக்கு எந்தவித ஈடுபாடு இல்லை என கட்சிக்குள்ளே பேசிக்கிறாங்க.. இந்த மாவட்டத்துக்கு புதிதாக மாவட்ட செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாராம்.. அவரது செயல்பாடும் களைகட்ட வில்லையாம்.. போக போகத்தான் தெரியுமாம்.. இந்த விஷயத்தில் தலைமையும் பெரிதாக கண்டுகொள்வது இல்லையாம்.. இதனால் பெயரளவுக்கு மாவட்ட செயலாளரை நியமித்தால் போதும் என்கின்ற மனநிலைக்கு தலைமையும் வந்து விட்டதாம்.. இதனால் முக்கிய நிர்வாகிகளும் தங்கள் இஷ்டம் போல் செயல்படுறாங்க.. முரசு கட்சி முடங்கி போய் இருப்பதாக கூறி தொண்டர்களும் சோர்ந்து போய் இருக்காங்க என கட்சிக்குள்ளேயே அரசல்புரசலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற கதையாக தேனிக்காரரின் நிலையை பார்த்து அவரது ஆதரவாளர்களே மனம் குமுறுகிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேனிக்காரர் நிலை தான் பரிதாபகரமாக இருக்காம்.. சேலம்காரர் கட்சியை விட்டு நீக்கிய போதிலும், எப்படியாவது இலை கட்சியில் மீண்டும் ஐக்கியமாகி விடலாம் என்ற தேனிக்காரரின் எண்ணம் பலிக்காமல் போய்விட்டது.. டெல்லி தலைமை எப்படியும் தனக்கு ஆதரவாக இருக்கும் என நம்பினார். அதுவும் கனவாகிப் போச்சு.. இதனால் யாரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அவருடன் ஐக்கியமாகி விட்டார்.. இதனால் ஏற்கனவே தேனிக்காரருடன் இருந்த சொற்ப ஆதரவாளர்களும் ஒவ்வொருவராக கழன்று விட்டனர்.. தென் மாவட்டங்களில் அவருக்கு பெரும் ஆதரவாக இருந்த சட்டப்புலி எம்எல்ஏவும் திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் சேலம்காரரை எதிர்த்தும், அவரது பொதுச்செயலாளர் பதவியை எதிர்த்தும் வழக்கு தொடுத்த தேனிக்காரர் வாதாடக் கூட ஆள் புடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம்.. அவரின் நிலையை எண்ணி தென் மாவட்ட இலைக்கட்சியினர் எப்படி இருந்தவர் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்கின்றனர். ஒரு காலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர், இலை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கானல் நீராகி விட்டார் என அவரது ஆதரவாளர்களே மனம் குமுறுகின்றனராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.