சென்னை: கரூர் துயரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 27ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் கரூர் சம்பவம் குறித்து தனது யூடியூப் சேனலின் அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் பிரபல யூடியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் இன்று கைது செய்தனர். டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிய 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட 25 பேரையும் கைது செய்ய சென்னை காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும், கரூரில் விஜய் பிரச்சார கூட்ட துயர சம்பவம் விவகாரத்தில் தெற்கு நகர தவெக பொருளாளர் பவுன்ராஜ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பவுன்ராஜை கரூர் நகர காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று (செப்.29) இரவு தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.