சென்னை: கரூர் துயரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிய 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட 25 பேரையும் கைது செய்ய சென்னை காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே கரூரில் விஜய் பிரச்சார கூட்ட துயர சம்பவம் விவகாரத்தில் தெற்கு நகர தவெக பொருளாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பவுன்ராஜை கரூர் நகர காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
+
Advertisement