கரூர் துயரம் குறித்து பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்த உள்ளது சிறப்பு புலனாய்வு குழு
கரூர்: கரூர் துயரம் குறித்து பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கு சென்று சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உள்ளது. கரூர் துயரம் தொடர்பாக விசாரணை நடத்த ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.கரூரில் நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் நேற்று அஸ்ரா கர்க் ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு புலனாய்வு குழு நேற்று தனது விசாரணையை தொடங்கிய நிலையில் இன்று 2-வது நாளாக விசாரணை மேற்கொள்ள உள்ளது.