கரூரில் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விசிக சார்பில் தலா ரூ.50,000 வழங்கவுள்ளோம்: விசிக தலைவர் திருமாவளவன்
சென்னை: கரூரில் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விசிக சார்பில் தலா ரூ.50,000 வழங்கவுள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 'கரூர் சம்பவத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அரசியல் ஆதாயம் தேடுகின்றன. கரூர் நெரிசல் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமியும் அரசியல் செய்கிறார்' என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி அதிகார வரம்புகளை மீறி வருகிறார் எனவும் ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான பதிலடி கொடுத்து வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.