சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் நெரிசல் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், அந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடமைகளை மறந்து பொறுப்பின்றி செயல்பட்டதுதான் விபத்துக்குக் காரணம் என்று பாமக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த சம்பவம் குறித்த அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
+
Advertisement